கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், 286 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல், மஞ்சள் குங்குமம், பழங்கள், சேலைகள் உள்ளிட்ட 11 வகையான சீர் வரிசைகளும், 5 வகையான உணவுகளும் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியின் மூலம், கர்ப்பகாலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறை, ஊட்டச்சத்த உணவு முறை மருத்துவ பரிசோதனைகளின் அவசியங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. விழாவில் அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.