சபரிமலை கோயிலில் பெண்கள் அனுமதிப்பது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஐயப்ப பக்தர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் கலந்து கொள்ளும் சரண கோஷ ஊர்வலம் திருச்செந்தூரில் இன்று நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக பந்தளம் மன்னர் செங்கோட்டை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவம் உண்டு என்று தெரிவித்தார். சபரிமலை கோவில் வழக்கின் பின்புலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பம்பையில் நாளை சபரிமலை மேல்சாந்தியை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில் போராட உள்ளதாகவும் பந்தளம் மன்னர் குறிப்பிட்டார்.