மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக கடைபிடிப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கடைபிடிக்க வேண்டும், அதிமுக அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் அதிமுக அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடுவது தொடர்பாக அதிமுக அம்மா பேரவையின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அம்மா பேரவையில் மாநில செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆலோசனையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் அம்மா பேரவை சார்பில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கடைப்பிடிப்பது, அதிமுக அரசின் சாதனைகளை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்ப்பது  போன்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிறந்தநாளுக்கு தன்னை வந்து சந்திக்காமல் ஏழைகளை போய் சந்தித்து உதவி செய்யுங்கள் என்று சொன்ன ஒரே தலைவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றார்.

Exit mobile version