அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அந்தமான் மற்றும் வங்கக் கடலில் வரும் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதாகவும், அதன்பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 23-ம் தேதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம், கேரளா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version