100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மயில்சாமி, சென்னை சாலிகிராமத்தில், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி பல்வேறு கூட்டங்களிலும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வந்தார் மயில்சாமி.
மயில்சாமி இறப்பதற்கு முன் கேளம்பாக்கத்திலுள்ள மேகநாதஸ்வரர் கோவிலில் தன்னுடம் ஓம் காரம் பாடி மகிழ்சியுடன் இருந்தார் எனவும், ரஜினிகாந்தை இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யவைத்து பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய கடைசி ஆசை என்றும் மயில்சாமி கூறியதாக drums சிவமணி மனம் உருகி தெரிவித்தார்.கொரோனா காலத்தில் அனைவருக்கு உணவளித்த சிறந்த கொடை வள்ளல் கொண்டவர் மயில்சாமி என்றும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்கு தினமும் மாலை அணிவிப்பதை வழக்கமாக கொண்டவர் எனவும் நகைச்சுவை நடிகர் மனோபால உருக்கம் தெரிவித்துள்ளார்.