கோவை காந்தி பார்க் பகுதியில் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நீர் ஊற்றுகளுடன் பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாநகர மக்கள், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களுக்கு கோவை வ.உ.சி பூங்கா, காந்தி பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகின்றனர். இந்நிலையில் கோவை காந்தி பூங்காவை சீரமைக்க 4.5 கோடி செலவில் அங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டு அதில் ஓடுகள் போடப்பட்டுள்ளன. இருபுறத்திலும் கம்பிகளாலான தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டு வருகிறது. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் ஓய்வு எடுக்க ஆங்காங்கே மேற்கூரைகள் வசதிகளுடன் நவீன இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் வெளிநாட்டில் உள்ள பூங்காக்களில் என்னென்ன வசதிகள் இருக்குமோ, அதேபோல அது நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. பூங்காவுக்குள் நுழைந்ததும் இடது புறத்தில் செயற்கை அருவி இயற்கையாகவே இருப்பது போன்று தத்ரூபமாக அமைக்கப்பட்டு வருகிறது.