இந்தியாவிலேயே முதல் முறையாக டிராஃபிக் போலீசுக்கு ஃபேன், பயோ டாய்லெட்டுடன் கூடிய நிழற்குடை

இந்தியாவிலேயே முதல்முறையாக கோவை அவினாசி சாலையில் உள்ள சி.எம்.சி சிக்னலில் போக்குவரத்தைக் ஒழுங்குபடுத்தும் காவல்துறையினருக்கு நிழற்குடையின் கூடிய பயோ டாய்லட் நிறுவப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீசாரின் சிரமங்களைக் தவிர்க்க கழிவறை வசதியுடன் நிழற்குடை நிறுவப்பட்டுள்ளது. சுமார் 12 அடி உயரம் உள்ள இந்த நிழற்குடையில் கழிவறை வசதியும் இணைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.சுமார் 4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த நிழற்குடையில் மின்விசிறி, இரவு நேரங்களில் லைட் உள்ளிட்ட வசதிகளுடன் செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து போலீசாரின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிழற்குடையைக் அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம்(பார்க்) கட்டி தந்துள்ளனர். இது குறித்து அந்நிறுவனத்தின் மேலாளர் முரளி கூறுகையில், போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசார் சாலையின் நடுவே காலை முதல் இரவு வரை பணியாற்றும் அவர்கள் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றால் அருகே உள்ள நிறுவனங்கள் மற்றும் அதன் அலுவலகங்களில் உள்ள கழிவறைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதைக் தவிர்க்க நாங்கள் இதைக் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக பெண் போலீசாரின் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த டாய்லெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது போன்று தங்களது நிறுவனத்தின் சார்பில் கோவையின் பல்வேறு முக்கிய சிக்னல்களில் கோவை மாநகர போக்குவரத்து போலீசாரின் உதவியோடு இந்த பயோ டாய்லெட் நிறுவப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், கோவையில் பல்வேறு பகுதியில் காந்திபுரம் லட்சுமி சிக்னல் மற்றும் ரயில்நிலையம் உள்ளிட்ட 15 இடங்களில் நிறுவ திட்டம் வகுத்து உள்ளனர். இந்த நிழற்குடை போலீசார் மற்றும் பொது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிழற்குடை துவக்க விழாவில் ஆணையாளர் சுமித் சரண் துவக்கி வைப்பார் என தெரிவித்தார்.

Exit mobile version