உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்ல திருமண வரவேற்பு விழாவில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
உயர்கல்வித்துறை அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுக கழக செயலாளருமான கே.பி.அன்பழகனின் இளைய மகன் சசிமோகன், சென்னையை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகள் பூர்ணிமா ஆகியோரின் திருமணம் கடந்த மாதம் திருப்பதியில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அவர்களின் திருமண வரவேற்பு விழா தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள கெரகோடஹள்ளியில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அமைச்சர் கே.பி.அன்பழகன் உயர்கல்வி துறையில் சகாப்தம் படைத்துள்ளதாக பாராட்டினார்.