தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்: முதல்வர்

தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்குமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 29 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலை மற்றும் கொங்கணாபுரம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதேபோல், புதிய பேருந்துகளின் சேவையையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சாலை வசதிகள் சிறப்பாக உள்ளளது. குடிமராமத்து பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. உள்கட்டமைப்பில் தமிழகம் சிறப்புடன் திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்குமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள் என்றும், அணை கட்டும் விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தபடி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version