திருச்செங்கோட்டில் ரூ.399 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் துவக்கம் – முதல்வர் பழனிசாமி பேச்சு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஆயிரத்து 706 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

விழாவில் பேசிய அவர், திருச்செங்கோட்டில் 399 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுவது குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

பருவ மழையை எதிர்கொள்ள 5 முறை ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டதால், புயலின் பாதிப்பு குறைந்துள்ளது என்றார் அவர். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், புயல் வருவதற்கு முன்பாகவே அங்கேயே தங்கியிருந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும் முதலமைச்சர் கூறினார்.

Exit mobile version