பழத்திற்கு பணம் வழங்கியதை அவதூறாக சித்தரித்த திமுக: முதலமைச்சர் விளக்கம்

வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர் ஒருவருக்கு பணம் வழங்கியதாக திமுகவினர் அவதூறு பரப்பியதாக கூறியுள்ள முதலமைச்சர், அதுபற்றிய உண்மையை விளக்கியுள்ளார்.

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, பெட்டிகடையில் இருந்த பெண் ஒருவர் முதல்வருக்கு அன்பாக பழங்களை வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், அதற்கு உரிய தொகையை அந்த பெண்ணிடம் அளித்தார். இதனை திமுகவினர் அவதூறாக சித்தரித்து அவதூறு பரப்பி வந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, திமுகவினரை போன்று இலவசமாக நாங்கள் எந்தப்பொருளையும் வாங்குவதில்லை என விளக்கம் அளித்தார்.

Exit mobile version