சிட்டி யூனியன் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு நிதிநிலை முடிவுகளை சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி வெளியிட்டார். மூன்றாம் காலாண்டில், நிகர வட்டி வருவாய் ரூ.418 கோடியாக அதிகரித்துள்ளது என்றார். நிகர லாபம் 15 சதவிகிதம் உயர்ந்து 178 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், வங்கியின் மொத்த வணிகம், கடந்த ஆண்டை விட, 15 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் காமகோடி தெரிவித்தார். வங்கியின் வைப்பு தொகை ரூ.35,504 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.