சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

 

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் நேரடியாக விளையாட வாய்ப்பு பெற்ற நடப்பு சாம்பியனும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்பின் முகுருஸா (GarbineMuguruza) 44ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் லிசியா சுரென்கோவை (Lesia Tsurenko) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கார்பின் முகுருஜா 6 க்கு 2, 4 க்கு 6, 4 க்கு 6 என்ற செட் கணக்கில் லிசி சுரென்கோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். அதேபோன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் 4க்கு 6, 6 க்கு 2, 6 க்கு 1 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னாரினோவை தோற்கடித்து 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

 

 

Exit mobile version