பழமையான கோட்டை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

ஒசூரில் உள்ள பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

ஒசூரின் ராம்நகரில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான கோட்டை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் பூங்கரகம், அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை மேற்கொண்டனர்.

ஒருமாத காலம் விரதமிருந்த பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Exit mobile version