உடுமலை அருகே 11வது நாளாக முகாமிட்டிருக்கும் சின்னத்தம்பி யானை

உடுமலை அருகே 11வது நாளாக முகாமிட்டிருக்கும் சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுத்தூர் கிராமத்தில் உள்ள வாழைத்தோப்பில் சின்னதம்பி யானை தற்போது தஞ்சம் அடைந்திருக்கிறது. அப்பகுதியில் நீர் தேடி அலைந்த சின்னதம்பி யானை, நீர் கிடைக்காத விரக்தியில் அங்குள்ள குழாயை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது கிடைத்த நீரை அருந்திய பிறகு அங்கேயே முகாமிட்டது.

இந்நிலையில் சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட டாப்சிலிப்பில் இருந்து சுயம்பு என்ற யானை வரவழைக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கும்கி யானை மாரியப்பனுக்குப் பதிலாக சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version