எங்கே விழுமென்று தெரியாது: வானிலிருந்து பூமிக்கு வரும் சீன ராக்கெட்

விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சீன விண்வெளி நிலையத்துக்கான கட்டுமான கலத்தை, நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்திவிட்டு, மீண்டும் பூமி திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த  ’மார்ச்5பி’ ராக்கெட்டை சீனா கடந்த மார்ச் 29 ஆம் தேதி அனுப்பியது. அப்போது இந்தியாவின் கொரோனா பேரிடர் நிலைமையைக் குறிபிட்டு கேலி செய்யும் வகையில் வெளியிடப்பட்ட படம் ஒன்று சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதன் விளைவாக, அந்தப்படம் பின்னர் நீக்கப்பட்டது. 
 
வெளியான படம் ( சீனா ஒளிர்கிறது – இந்தியா ஒளிர்கிறது என்ற செய்த்யுடன் வெளியானது)
 
 
 
அந்த வகையில், விண்வெளியில் விண்வெளி நிலைய கலத்தை நிர்ணயித்த இடத்தில் நிலை நிறுத்திய ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்ப தொடங்கும்போது ராக்கெட்டில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், அந்த ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் அது பூமியின் எந்த பகுதியில் விழும் என்ற தகவலும் முழுமையாக கிடைக்காததால் விஞ்ஞானிகள் அச்சமடைந்துள்ளனர்.
 
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் மைக் ஹாவர்ட் கூறுகையில், சீனாவின் ’மார்ச் 5பி’ ராக்கெட் மே 8-ம் தேதி வாக்கில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விண்வெளித்துறை ராக்கெட்டின் பாதையை கண்காணித்து வருகிறது.  ராக்கெட் விண்வெளியில் இருந்து பூமியின் எந்த பகுதி வழியாக நுழையப்போகிறது என்பது இன்னும் தெரியவில்லை. ராக்கெட் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே அது எங்கு விழப்போகிறது என்று தெரியும்’ என்றார்.  
 
இது எந்தப்பகுதியில் விழுந்து சேதம் ஏற்படுத்துமோ என்ற அச்சமும், இதற்காக கொடுக்கப்பட வேண்டிய நட்ட ஈடு குறித்த கவலை ஒருபுறமும் இருக்க உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை தலைகுனிவை சந்திக்க உள்ளது சீனா என்ற கவலை, மறுபுறத்தில் ஆட்சியாளர்களை கலக்கமடயச் செய்துள்ளது. வெற்றியைடையும் முன்பாக கிடைக்கும் அறிகுறிகளை முழு வெற்றி என நம்பி கூத்தாடி கடைசியில் திருடனுக்குத் தேள் கடித்த நிலையில் திக்கித் திணறி வருகிறது சீனா. 
Exit mobile version