சீனாவில் சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு

எரிபொருள் இல்லாமல், சூரிய சக்தியில் இயங்கும் விமானத்தை சீனாவின் ஆக்ஸ்.எய் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

15 மீட்டர் இறக்கையுடன் வடிவமைக்கப்பட்டு சூரிய மின்கலங்களால் மட்டுமே இயக்கப்படும் இந்த விமானத்திற்கு, மோஜி 2 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8,000 அடி உயரத்தில் பறக்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. எட்டு மணி நேரம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்தால், 12 மணி நேரம் வரை குறைந்த வேகத்தில் பயணிக்க கூடிய வகையிலும், பேரழிவு நிவாரணம், உளவு கண்காணிப்பு ஆகியவற்றிற்கு பயன்படும் வகையிலும் மோஜி 2 உருவாக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version