திபெத்தில் புதிய அணை அமைக்க சீன அரசு முடிவு!

சீன நாடானது திபெத்தில் உள்ள மப்ஜா சங்போ நதியில் புதிய அணை கட்டுவதற்கு முடிவு எடுத்துள்ளது. இந்த அணையின் அமைவிடமானது இந்திய, நேபாள, திபெத்தின் முச்சந்திப்பு எல்லையில் இருக்கப்போவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனா யார்லங் சங்போ நதியில் கடந்த 2021ஆம் ஆண்டு அணை ஒன்றினை கட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அணையில் தேங்கிய நீரைக்கொண்டு 70 பில்லியன் மெகாவாட் மின்சாரமானது சீன அரசு உற்பத்தி செய்தது. இந்த யார்லங் சங்போ நதிதான் இந்தியாவில் பிரம்மபுத்திரா என்று அழைக்கப்பட்டு வருகிறது. சீனா யார்லங் சாங்போ நதியில் கிட்டத்தட்ட் மூன்று அணைகள் கட்டி தங்களின் ஹைடிரோ ஆற்றல் வளத்தை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

 

பிரம்மபுத்திரா நதி 2,880 கி.மீட்டர் நீளமுடையது. மானோசர்வர் ஏரி வழியாக உள்நுழையும் இந்த நதி திபெத்தில் 1,700 கி.மீட்டரும், அருணாச்சல பிரதேசத்தில் 920 கி.மீட்டரும், அசாமில் 260 கி.மீட்டரிலும் பாய்கிறது. இந்தியாவின் 30 சதவீத நன்னீருக்கும் 40 சதவீத ஹைடிரோ ஆற்றலுக்கும் பிரம்மபுத்திரா நதிதான் காரணம். தற்போது புதிய அணையினை அமைக்கவுள்ள சீன அரசு முன்சொன்ன முச்சந்திப்பிற்கு சரியாக 16 கி.மீட்டர் தொலைவில் அமைக்கவுள்ளது. இந்த முச்சந்தி சரியாக உத்ரகாண்ட் மாநிலத்தின் கல்பாணி பகுதிக்கு எதிர்ப்புறமாக உள்ளது. முக்கியமாக அணை அமைய உள்ள மப்ஜா சங்போ நதியானது இந்தியாவின் கங்கை நதியின் துணை நதி ஆகும். அதாவது இந்த மப்ஜா சங்போ நதியானது நேபாளத்தின் காஹ்ரா நதி வழியாக கங்கை நதியை அடைகிறது.

தற்போது இந்த மப்ஜா சங்போ நதியில் சீன அரசு அணைக்கட்டினால் நீர் மேலாண்மை முழுவதுமாக சீனாவிடமே சென்று விடும் என்று இந்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சீன அரசு, நாங்கள் நதியினை மடைமாற்றி விடமாட்டோம் தேக்கி மட்டும்தான் வைப்போம் என்று கூறியுள்ளது. ஏற்கனவே சீன அரசு திபெத்தை கைப்பற்றியதின் விளைவாக ஒரு 18 நாடுகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆறுகள் தொடங்கும் அல்லது உருவாகும் பகுதியினை தன்வசப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இத்தகைய நடவடிக்கை உலகநாடுகளினிடையே சீனாவிற்கு எதிரான விவாதத்தை கிளப்பிருக்கிறது.

Exit mobile version