தோட்டம் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது மரம்,செடி,கொடி,பூக்கள் தான்.நம்ம எல்லாரும் அப்படி ஒரு அக்கறையெடுத்து அதை பாத்துப்போம்.நமக்கு ஏத்தமாதிரி அதை டிசைன் பண்ணுவோம்.ஆனால் சிலி நாட்டில் ஒரு மனிதன் தன்னோட தோட்டத்தை ரயில்கள் இருக்குற மாதிரி செட் பண்ணிருக்காரு.அதுவும் நிஜமான ரயில்கள்.
ஜோஸ் சாகல்- இவர்தான் அப்படி ஒரு தோட்டத்துக்கு சொந்தக்காரர்.
“என்னோட சின்ன வயசுல சிலி முழுக்க ரயில் ஓடிட்டு இருந்துச்சி.நான் ஒரு ரயில் ரசிகர்.அதுல பயணம் போறதுனா அவ்வளவு பிடிக்கும்.அதனால அதை நான் முடிஞ்சவரை காப்பாத்தணும்னு நினைச்சேன்.அதுக்காக என்னோட தோட்டத்துல ரயிலை கட்ட ஆரம்பிச்சேன்னு” ஒரு வேடிக்கையான காரணம் சொல்லிருக்காரு சாகல் . எப்படி நிஜ ரயில் கட்டுனாருன்னு நினைக்கிறிங்களா?
சிலி நாட்டோட மிகப்பெரிய சுமையா இருந்தது ரயில்வே பாதைகள் தான்.அதுல 2 எக்ஸ்பிரஸ்,12 பயணிகள் ரயில், சரக்கு ரயில்ன்னு தினம் ஓடிக்கிட்டு இருந்துருக்கு. 1980ல் அகஸ்டோ பினோசே-ன்னு ஒரு ராணுவ சர்வாதிகாரி சிலியோட ரயில்வே பாதைகளை எல்லாம் உடைத்து எறிஞ்சாரு.அதுல சில ரயில்பாதையில மட்டும் இன்னும் ரயில் ஓடிட்டு இருக்குது.அவரோட 17 ஆண்டு சர்வாதிகார ஆட்சியில ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டே வெளியேறுனாங்க.அவரோட விருப்பமெல்லாம் சாலை வழி பயணம் மேலதான் இருந்துச்சி.
1998ல் மனித உரிமைகள் மீறியதா குற்றச்சாட்டுல கைது ஆன ராணுவ அதிகாரி அகஸ்டோ பினோசே 2006ல் இறந்தார். ஆனால் சிலி முழுக்க ரயிலும்,தண்டவாளங்களும் இல்லாமலே போயிடுச்சி.அதன்பின் சிலி மக்களும் பஸ் டிராவல்ல தான் ரொம்ப விரும்புனாங்க.
சாகலுக்கு ரயிலோட சத்தம்,வாசனை,மெஷின் இல்லாம இருக்க முடியல.என்ன பண்ணலாம்ன்னு தெரியாம கஷ்டப்பட்டாராம்.அந்த சமயம் ரயில் பாதையெல்லாம் இல்லாததால ரயில் எல்லாத்தையும் அழிக்க முடிவு பண்ணாங்க.மக்கள் மெட்டலுக்காகவும் விறகுக்காகவும் அதை உடைச்சி எடுத்துப்போனாங்க. சாகலும் எவ்வளவு முடியுமோ அதை எடுத்துட்டு வந்து தன்னோட தோட்டத்துல வச்சி பாதுகாத்தாரு.அந்த நாட்கள் தான் சிலியோட வரலாற்றின் அழிக்கப்பட்ட பக்கங்கள்ன்னு சாகல் குறிப்பிடுகிறார்.
முதலில் மாதிரி ரயில் செய்து வாழ்ந்து வந்த சாகல், அதுல சலிப்பு வரவே, நிஜ ரயிலை வாங்கி நிறுத்தினாரு.அதன்பின், தன்னோட தோட்டத்தை சுத்தி மினி ரயில்வே ஸ்டேஷனையே கொண்டுவந்தார்.குறிப்பாக அந்த பெரிய கடிகாரம்.குளிர் தாங்கக்கூடிய “ரெயில்ரோட்”ஸ்டைல்ல கட்டிடம் கட்டுனாரு.ஒரு இஞ்சினீயரை கூப்பிட்டு வந்து அவரோட தலைமையில் இந்த வண்டிய நகர்த்தினார்.அவரோட தோட்டத்துல 300 மீட்டர் ரயில் பாதைகள் , சிக்னல்களோட இருக்குது. அவரோட வீட்டுல பல ரயில் மாதிரிகள் சேர்த்து வச்சிருக்காரு.இதிலிருந்து அவர் எவ்வளவு பெரிய ரயில் ரசிகர்ன்னு நாம தெரிஞ்சிக்கலாம். அவருக்கும் ரசிகர்கள் இருக்காங்க.
அவரோட இறப்புக்கூட ரயில் சிநேகிதத்தோட இருக்கணும்ன்னு ரயில்வடிவ சவப்பெட்டியில் தான் புதைக்கப்பட்டார்.தன்னோட வாழ்நாள் முழுவதும் நான் ரயில்ல விளையாடுவேன்னு சொன்னது உள்ளிட்ட பல நிகழ்வுகள் அவரோட ரயில் பெட்டிகள்ல எழுதப்பட்டு இன்னும் பயணித்துக்கொண்டு தான் இருக்கிறது
Discussion about this post