குழந்தைகள் விற்பனை வழக்கு:குற்றவாளிகள் 8 பேரையும் சிபிசிஐடி காவலில் எடுக்க முடிவு

நாமக்கல் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் குழந்தைகளை பேரம் பேசி விற்று வந்த ஆடியோ வெளியானதையடுத்து 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு முன்னாள் செவிலியர் அமுதா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நாமக்கல் குழந்தைகள் விற்பனை மற்றும் விற்கப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Exit mobile version