கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, வரும் 30ம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, கொரோனா தொற்று அதிகமாக உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் சண்முகம் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
பாதிப்பு அதிகம் உள்ளப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் ஆலோசனை வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.