ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்புக்காக ஜிபிஎஸ் கருவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்புக்காக ஜிபிஎஸ் கருவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

2018-2019 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவ குழுக்களுக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக இந்திய விண்வெளி மையம் உருவாக்கிய, நேவிக் எனும் செயற்கோள் மூலம் குறுஞ்செய்தி பெறும் ஆழ்கடல் தகவல் தொடர்பு கருவி, 80 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, நாகை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 7 மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த கருவி மூலம் , வானிலை தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை தகவல்களும் மீனவர்களுக்கு குறுஞ்செய்தியாக கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version