பேரறிஞர் அண்ணாவிற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் புகழஞ்சலி

தாய்த் தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட, தமிழன்னையின் தலைமகன் பேரறிஞர் அண்ணா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவுநாளையொட்டி, ட்விட்டரில் அவரை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரை சட்டப்பூர்வமாக்கி, தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும் என வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும், தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணாவை அவரது நினைவு தினத்தில் போற்றி வணங்குவதாக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தில், தனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழை சுவாசித்தவர், தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர் பேரறிஞர் அண்ணா என்றும் அவர் கூறியுள்ளார். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறு ஆனவர் பேரறிஞர் அண்ணா என்றும் துணை முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

Exit mobile version