நாடாளுமன்ற தேர்தலையொட்டி தலைமை தேர்தல் அதிகாரி விரைவில் தமிழகம் வருகை

நாடாளுமன்ற தேர்தல் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விரைவில் தமிழகம் வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் வாக்களர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் குறித்த திருத்தப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்க தேர்தல் ஆணையர் சென்னை வர உள்ளார். கருத்துகள் கேட்ட பிறகு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்க உள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டு வருவதால் அதுகுறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version