பிரிக்க முடியாதது மின்வெட்டும் திமுகவும்! பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம்!

சென்னையில் தொடர் மின்வெட்டினை ஒட்டி பொதுமக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜாஃபர்கான்பேட்டை ராகவன் காலனியில் இரவு சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதிக்குட்ட மின்சாரவாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் மின்துறை ஊழியர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி மின்வாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர், அசோக் நகர், ஜாஃபர்கான்பேட்டை, ராகவன் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரம் மட்டுமில்லாமல் பகல் நேரங்களிலும் கடந்த 4 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகன்றனர்.

 

Exit mobile version