போளூரில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்து சேவை

போளூரில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று போளூரில் இருந்து ஆரணி வழியாக சென்னைக்கு 2 புதிய டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புதிய பேருந்துகளின் சேவையை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி, எம்.பி. ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் தூசி. கே.மோகன், கே.வி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய பேருந்தில் அமைச்சரும், அதிகாரிகளும் புதிய பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தனர். 

Exit mobile version