சென்னையில் கொசுக்கள் பெருக்கம்.. மக்கள் அவதி!

சென்னை மக்கள் கொசுவால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு கொசுக்கள் பெருக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அழிக்காததும், தரமற்ற கொசு மருந்து வகைகளை பயன்படுத்துவதுமே காரணம் என்று அதிமுக மாமன்ற
உறுப்பினர் சத்யநாதன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் முன் எப்போதும் இல்லாத வகையில் கொசுத் தொல்லையால் மக்கள் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது. சென்னை மாநகரில் பாயும் அடையாறு, கூவம் போன்ற ஆறுகளில் இணையும் இணைப்பு கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் விட்டதும், மழை நீர் வடிகால்வாய் பணிகள் முழுமைப் பெறாததும் தான் இதற்கு காரணம் என்று, அதிமுக மாமன்ற உறுப்பினர் சத்யநாதன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு சாலையிலும் தினந்நோறும் கொசு தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டதாகவும், தற்போது அந்த பணிகள் முறையாக நடைபெறம்வில்லை என்று விடியா திமுக ஆட்சியின் அவலங்களை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Exit mobile version