காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனத்தால் தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் இருந்து கடலோர ஆந்திரா மற்றும் உள் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.