சென்னையில் பான் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை..!

சென்னையில் பான் கடையில் கஞ்சா சாக்லேட் மற்றும் கஞ்சா உருண்டைகளை விற்பனை செய்த பீகார் மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் அருகே சாய் என்ற பான் கடையை பீகார் மாநிலத்தை சேர்ந்த கசரத் என்பவர் நடத்தி வந்தார். இந்தக் கடையில் போலீசார் திடீர் சோதனை செய்த போது, கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் பான் கஞ்சா உருண்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து கடையின் அருகே உள்ள குடோனில் சோதனை செய்தபோது சுமார் 38 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பதும் தெரியவந்தது.

Exit mobile version