கொரோனா: 2ஆம் அலையை எதிர்க்கத் தயாராகும் சென்னை

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ள நிலையில், மீண்டும் மூன்றடுக்கு படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தொடர் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு, பெரிய மருத்துவமனைகளிலும், சற்று திடமான நோயாளிகளுக்கு சிறிய மருத்துவமனைகளிலும், அறிகுறிகள் இல்லாத இளவயதினருக்கு கல்லூரி வளாகங்களில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும், வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

தற்போது சென்னையில் உள்ள ஐந்து அரசு மருத்துவமனைகளில் உள்ள 4 ஆயிரத்து 343 இடங்களில், 2 ஆயிரத்து 217 படுக்கைகள் தற்போது வரை நிரம்பியுள்ளன. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனைகளில், 90 சதவீத படுக்கைகள் நிரம்பி விட்டன.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைகழக விடுதி, அம்பேத்கர் கலைக்கல்லூரி, ஐ ஐ டி மெட்ராஸ், குருநானக் கல்லூரி உட்பட பல்வேறு இடங்களை பராமரிப்பு மையங்களாக மாற்றி, 11 ஆயிரத்து 775 படுக்கைகள் உருவாக்கப்படுகின்றன. இதுதவிர, கே.கே.நகர், தண்டையார்பேட்டையில் சிறிய மருத்துவமனைகளில் சுமார் 2 ஆயிரம் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Exit mobile version