128 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டு 128 ஆண்டுகள் ஆகின்றன.. சென்னை உயர்நீதிமன்றத்தின் உண்மையான பெயர் என்ன? அதன் 128 ஆண்டுகால வரலாறு என்ன என்பது பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு….

 

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பாகவே பிரித்தானிய அரசு இந்தியாவில் நீதிமன்றங்களை நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்று தான் சென்னை உயர்நீதிமன்றம்… இந்தோ-சார்செனிக் கட்டிடக் கலை பாணியில் 1888-ம் ஆண்டு ஜே.டபிள்யூ. பிராஸிங்டன் () என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892இல் ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டிமுடிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தை, அப்போதைய தலைமை நீதிபதியான ஜான் ஆர்தர் காலின்ஸ் என்பவர் 1892-ம் ஆண்டு திறந்து வைத்தார்…. அப்போதே12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெருமை கொண்டது சென்னை உயர்நீதிமன்றம்.

தொடக்கத்தில், ‘சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் முதல் ‘மெட்ராஸ் ஹை கோர்ட்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. தற்போதைய சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்துக்கு முன் கொய்யா தோப்பு ((ஜார்ஜ் டவுன்)) என்ற இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கி வந்தது. விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, தற்போதைய உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது.

1996 ஆம் ஆண்டு மெட்ராஸ் என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டபோது உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்றே வழங்கப்பட்டு வந்தது. ((2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்ற நடுவண் அரசு அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய))

 

செவ்வண்ணம் தீட்டப்பட்ட கட்டிடத்தின் கூரைகளும், பலவண்ணக் கண்ணாடிகள் பொதிந்த கதவுகளும், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ((மெரீனா கடற்கரைக்கு முன்னதாக கலங்கரை விளக்கம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் தான் இயங்கி வந்தது. புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் மெரீனா கடற்கரைக்குள் கலங்கரை விளக்கம் செயல்பாட்டுக்கு வந்தநிலையில், இந்த கலங்கரை விளக்கம் காட்சிப் பொருளாக நிற்கிறது.. ))

 

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு முக்கிய அடையாளமாக திகழும் சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிறது… வரலாற்றையே மாற்றிய பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்புகளை வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் கொரோனாவால் மூடப்பட்டிருந்தாலும், காணொலி காட்சி மூலம் தொடர்ந்து தன்னுடைய பணிகளை செய்து வருகிறது… இன்னும் பல நூறு ஆண்டுகள் கம்பீரமாய் நின்று பல வழக்குகளை சந்தித்து சாமான்யர்களுக்கும் நீதி கிடைக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை…

Exit mobile version