சென்னை – கோவை இடையே இயங்கும் இன்டர்சிட்டி விரைவு ரயில் கன்வென்சனல் பெட்டிகளுக்குப் பதில் நாளை முதல் எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு விரைவு ரயில்கள் கன்வென்சனல் பெட்டிகளுக்குப் பதிலாக, எல்எச்பி பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட்டு வருகின்றன. கன்வென்சனல் பெட்டிகளைக் கொண்ட ரயில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம் செல்லும் திறனுடையது. எல்.எச்.பி. பெட்டிகளைக் கொண்ட ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் செல்லும் திறனுடையது.
இந்நிலையில் சென்னை – கோவை இடையே இயங்கும் இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் நாளை முதல் எல்எச்பி பெட்டிகளைக் கொண்டு இயங்கும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.