சென்னையில், ஜப்பான் நாட்டின் கலாசாரங்கள் குறித்து எடுத்துரைக்க, ஜப்பான் இரவு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் சார்பில், ராணி சீதை மன்றத்தில் ”ஜப்பான் இரவு” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில், ஜப்பான் மொழியை கற்றுவரும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, ஜப்பான் மொழியில் பேசியும், அந்நாட்டின் கலாசாரங்கள் குறித்து நடித்து காண்பித்தும் அம்மொழி மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம், சர்வேதச அளவில், ஜப்பான் மொழி கற்றால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டது. தென்னிந்தியாவில் ஜப்பான் மொழி கற்போரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், இதுபோன்ற நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.