சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதி நெய்தாளபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கெம்பப்பா என்பவர், தான் பராமரித்து வரும் மாடுகளை வீட்டின் முன்பு கட்டி விட்டு சென்றார்.
காலையில் பார்த்தபோது கன்றுக்குட்டியும், காவலுக்காக வளர்க்கபபட்ட நாயும் கழுத்தில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்ததைக் கண்டு அத்ர்ச்சியடைந்தார். தாளவாடி வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை கன்றுக்குட்டியையும், நாயையும் அடித்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது.
சிறுத்தை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post