மின்பாதை பாரமரிப்பு காரணமாக கோவை-மேட்டுப்பாளையம் ரயில் சேவையில் மாற்றம்

மின் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம்- கோவை இடையேயான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் – கோவை இடையே பயணிகள் ரயில் நாள் ஒன்றுக்கு எட்டு முறை இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் எஞ்சினில் இயங்கி வந்த இந்த ரயில் சேவை கடந்த 4 ஆண்டுகளாக மின்சார ரயில் பாதையாக மாற்றப்பட்டு மின்சார ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது கோவை, பீளமேடு, மேட்டுப்பாளையம் ஆகிய மின்சார ரயில் பாதையில் மின் தடங்கள் பராமரிப்புக் காரணமாக ரயில்வே நிர்வாகம் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு எட்டு முறை இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் சேவை 6 முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 35 நாட்களுக்கு இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் எந்தவித மாற்றம் இன்றி வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Exit mobile version