சந்திரயான் 2 திட்டத்தின் ‘கிரயோஜெனிக்’ என்ஜின் சோதனை வெற்றி!

சந்திரன் குறித்து ஆய்வு செய்வதற்காக ஏவப்படவுள்ள சந்திரயான் 2 திட்டத்தின் ‘கிரயோஜெனிக்’ என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

நிலவு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, சந்திரயான்-1 திட்டத்தை வெற்றிகரமாக முடித்தது.

இதனை தொடர்ந்து அடுத்தகட்ட ஆய்வில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இதன் அடிப்படையில் ஜனவரி 3-ம் தேதி, ஜி.எஸ். எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட உள்ளது.

இதன் எடை 2 ஆயிரத்து 379 கிலோ ஆகும். இதனுடன் ஆயிரத்து 471 கிலோ எடையுள்ள விக்ரம் மற்றும் 27 கிலோ எடையுள்ள ரோவர் கருவிகளும் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில் ஜி.எஸ். எல்.வி. மார்க்-3 ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் ‘கிரயோஜெனிக்’ என்ஜின் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.

Exit mobile version