13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை, வேலூர், திருவள்ளூர் உள்பட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, செவ்வாய்கிழமை அதிகாலை காக்கிநாடா அருகே, கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version