பெரியகோயிலில் சித்திரை திருவிழா கோலாகலம்

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரதநாட்டிய கலைநிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் கோயில், கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்கிவரும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் நாள்தோறும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், பரதநாட்டிய கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் 2ம் நாளன்று சென்னை ரிதாஞ்சலி பைன் ஆர்ட்ஸ் ஷோபியா ரதீஷ் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி மற்றும் பெங்களுர் நந்தினி நயன்த் கவுண்ட் டான்ஸ் அகாடமி நந்தினி விஷ்ணு குழுவினரின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Exit mobile version