ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் – மத்திய அரசு பரிந்துரை

ஜம்மு காஷ்மீரில் நாளை முதல் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என குடியரசுத்தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 6 மாதங்களாக ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. இது நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நாளை முதல், மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தார். டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின், ஆளுநர் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தனது பரிந்துரையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, மத்திய அமைச்சரவை அனுப்பி வைத்தது. அவர் ஒப்புதல் அளித்த பின், ஜம்மு காஷ்மீரில் நாளை முதல், குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version