2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி ஆவணங்களை தயாரிக்கவும் புதுப்பிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அசாம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் இந்த கணக்கெடுப்பு 2020, ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 6 மாதங்களுக்கு நடத்தப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலமான 1872 ஆம் ஆண்டு முதல், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் முறை அமலில் உள்ளது.