முல்லை பெரியார் அணையில் மத்திய நீர்வள ஆணையம் ஆய்வு

முல்லைப் பெரியாறு துணைக் கண்காணிப்பு குழுவின் தலைவர் தலைமையில், முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க நியமிக்கப்பட்ட மூவர் குழுவிற்கு உதவியாக, 5 பேர் கொண்ட துணைக் கண்காணிப்புகுழுவினர் குழு அமைக்கப்பட்டது. இதில் துணைக் கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், முல்லை பெரியாறு செயற்பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், மற்றும், கேரள அரசு சார்பில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் கொண்ட குழுவினர் முல்லை பெரியார் அணையில் ஆய்வு செய்தனர்.

தேக்கடி படகு துறையில் இருந்து படகு மூலம் அணைப் பகுதிக்கு சென்று, மெயின் அணையின் சட்டர் பகுதிகள், பேபி அணை பகுதி கேலரிகள் ஆகியவற்றை இந்த குழு ஆய்வு செய்தது. ஆய்வு அறிக்கைகள், மத்திய நீர்வளத் துறை ஆணையத்திற்கு, இந்த குழு அனுப்ப உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 114.10 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version