தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அதிமுக அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கொரோனா முதல் அலையை கடந்த அதிமுக ஆட்சியில் திறமையாக கையாண்டது அதன்பின்பு தேர்தல் வந்த காலத்தில் இரண்டாவது அலை அதிகம் பரவியது பின்னர் திமுக ஆட்சி அமைத்து இரண்டாவது அலையை பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், அதிகமாக பரவி வந்த நிலையில் இந்த இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த எவ்வாறு கையாண்டு வருகிறார்கள் என்பதை அவர்களே அவர்களை ஆராய வேண்டும்.
கடந்த கொரோனா முதல் அலையில் திரைப்படத் துறை தொழிலாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிதிகள் வழங்கப்பட்டது மேலும் திரைப்பட தொழிலாளர்களுக்கு சென்னை அருகே பனையூரில் 1000 குடியிருப்பு கட்ட அனுமதி பெற்ற தற்போது குடியிருப்புகள் முடியும் தருவாயில் இருக்கிறது இன்னும் 5000 தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க இந்த அரசு முன்வர வேண்டும்.
ஜெய்ஹிந்த் என்பது ஒரு முழக்கம் விடுதலை கிடைத்த காலகட்டத்தில் செண்பகராம பிள்ளை என்பவர் அந்த முழக்கத்தை உருவாக்கியவர் அவருக்காக சென்னையில் மணிமண்டபத்தில் தியாகிகள் தினமாக போற்றப்படுகிறது அப்படிப்பட்டவரை இழிவுபடுத்தும் விதமாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பேசியதாக தெரிகிறது அப்படி பேசி இருந்தால் அது கண்டிக்கத்தக்கது மேலும் ஜெய்ஹிந்த் ஒன்றியம் என்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.