தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் மத்திய குழு இன்று சந்திப்பு

கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

கஜா புயலால் வீடு, உடைமை, விவசாயம் அனைத்தும் இழந்து டெல்டா மாவட்டம் பேரழிவை சந்தித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சேதத்தை ஆய்வு செய்ய வந்த டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக்குழு, கடந்த மூன்று நாட்களாக பாதிப்புக்குள்ளன இடங்களில் ஆய்வு செய்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் வயல், தோட்டங்களையும், வேரோடு சாய்ந்து கிடக்கும் தென்னை உள்ளிட்ட பணப்பயிர் சேதம் குறித்தும் கணக்கெடுத்துக் கொண்டனர். உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களையும் சந்தித்து அவர்களிடம் இழப்புகள் குறித்து கேட்டறிந்தனர். மூன்றாம் நாளான நேற்று, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று பிற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய குழுவினர் சந்திக்க உள்ளனர். பின்னர் டெல்லி செல்லும் அவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.

 

Exit mobile version