செல்போன்கள் அணுகுண்டைப் போல பேராபத்தானது-நீதிபதிகள் வேதனை

செல்போன்கள் அணுகுண்டை போன்று பேராபத்தானது என்றும், அதன் நன்மை, தீமைகள் குறித்து தெளிவாக அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு காரணம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். குழந்தைகள் வரை பயன்படுத்தும் இணையதள பயன்பாட்டால், ஆபாச இணைய தளம் மட்டுமின்றி புளூவேல், வெப் புல்லிங்க் போன்ற ஆபத்தான விளையாட்டுகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவித்து இருந்தார். இதைத் தடுக்க Parentel window என்ற இணைய மென்பொருளை மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், செல்போன்கள் அணுகுண்டை போன்று பேராபத்தானது என்றும், அதன் நன்மை, தீமைகள் குறித்து தெளிவாக அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே பொள்ளாச்சி சம்பவம் போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு காரணம் என வேதனை தெரிவித்தனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில், கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய அவர்கள், இணையச் சேவை வழங்குவோருக்கு குழந்தை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Exit mobile version