செல்போனில் பெண்ணுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய விசிக பிரமுகர் கைது

சேலம் அருகே ஆபாச வீடியோக்களை பெண்களுக்கு அனுப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகி மோகன்ராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் காகாபாளையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக உள்ளார். இவர், தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாகானிஹரிடம் புகார் அளித்ததை அடுத்து, காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஆபாச வீடியோக்களை செல்போனில் அனுப்பியதாக வழக்கு பதிவு செய்து, மோகன்ராஜை மகுடஞ்சாவடி காவல்நிலையத்தினர் கைது செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து காவல்துறையினர் மோகன்ராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மோகன்ராஜ் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் வண்கொடுமை செய்வது போன்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.மிரட்டப்பட்ட பெண் யார். புகாரில் சிக்கிய மோகன்ராஜிக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version