மத்திய அரசின் கட்டாய விடுப்பை எதிர்த்து சிபிஐ இயக்குநர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

மத்திய அரசு உத்தரவு அளித்த கட்டாய விடுப்பை எதிர்த்து சிபிஐ இயக்குநர்கள் அலோக் வர்மாவும்,ராகேஷ் அஸ்தானா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானாவும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே பனிப்போர் மோதல் ஏற்பட்டது. அதிகார போட்டியும் நிலவி வந்த நிலையில், அலோக் வர்மா மீது லஞ்ச புகாரும் எழுந்தது. இந்நிலையில் இருவருக்கும் மத்திய அரசு கட்டாய விடுப்பு அளித்துள்ளது. இதனையடுத்து இணை இயக்குநராக இருந்த ராகேஸ்வர் ராவை இடைக்கால இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆதரவு ஊழியர்கள் சிபிஐ அலுவலகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. லஞ்ச புகாரில் சிக்கிய அலோக் வர்மா அறையில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மத்திய அரசு அளித்த கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மாவும்,ராகேஷ் அஸ்தானாவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Exit mobile version