காவிரி கூட்டு குடிநீரை தரமான நீராக மாற்றும் பணிகள் குறித்து சிறப்பு தொகுப்பு

காவிரி கூட்டு குடிநீரை ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. ரயில் மூலம் வில்லிவாக்கம் கொண்டு வரப்படும் நீர், கீழ்ப்பாக்கத்தில் சுத்திகரிக்கப்பட்டு தரமான நீராக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை விரிவாக விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…

சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டும் வரும் திட்டத்தை அறிவித்தார்.

அதனடிப்படையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் போர்கால அடிப்படையில் தண்ணீர் கொண்டுவரும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. முதன்முதலாக வந்த ரயிலை, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயகுமார், பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த குடிநீரானது கீழ்ப்பாக்கத்தில் உள்ள 104 ஆண்டுகள் பழமையான, தமிழகத்தின் முதல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 27 கோடி லிட்டர் கொள்ளளவு தண்ணீரை ஒரே நேரத்தில் சுத்திகரித்து சேமித்து வைக்கும் வசதி கொண்ட கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில், ஜோலார்பேட்டையில் இருந்து வரும் நீர் 45 கோடி கொள்ளளவு கொண்ட அலகில் சுத்திகரிக்கப்படுகிறது.

4 கட்டங்களாக நடைபெறும் சுத்திகரிப்பு பணிகளில் முதலாவதாக, வில்லிவாக்கம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து கீழ்ப்பாக்கத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு ராட்சத குழாய் மூலம் வரும் நீரானது, 2-வது இணைப்பு தொட்டிக்கு 90 கிலோ வாட் சக்தி கொண்ட 2 மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வேதிப்பொருள் சேர்க்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இரண்டாவதாக தண்ணீரில் குளோரின், அலுமினியம், பாஸ்பைட், சுண்ணாம்பு ஆகிய வேதிப்பொருட்கள் அதன் தன்மையை ஆராய்ந்து சேர்க்கப்படுகிறது.

இதன் பின்னர் சுழற்சி முறையில் சுத்திகரிக்கப்படும் இடமான 3வது கட்ட இடத்திற்கு தண்ணீர் மாற்றப்படுகிறது. இங்கு மூன்று வடிவமாக ஒரே நேரத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.

முதலில் வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட Raw வாட்டர் இங்கு அனுப்பப்படுகிறது. இதில் Flaglation zone, Claryfy flaglation zone, clarify zone என மூன்று முறைகளில் சுத்தம் செய்யப்படுகிறது. Flaglation zone என்பது வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட நீரில் உள்ள அதிகப்படியான கிருமிகளையும், தூசுகளையும் அகற்றி, Clarify flaglaton zoneக்கு செல்கிறது. அங்கு 80% சுத்திகரிக்கப்பட்டு Clarify zone வழியாக இறுதி இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன்பின் 4வது மற்றும் கடைசி கட்டமான Fillter bed என்று சொல்லக்கூடிய வடிகட்டும் இடத்திற்கு வருகிறது. இங்கு 6 Filter bed-கள் உள்ளன. ஒரு Filter Bedன் அளவானது 7.5 கோடி லிட்டர் அளவு கொண்டது. மொத்தமாக 6 filter bedகள் இதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் 6 அடுக்குகள் கொண்ட Filter bed வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கீழிருந்து முதல் அடுக்கில் பெரிய அளவிலான கூழாங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதன் பின் மேலே உள்ள 4 அடுக்குகளில் அளவு சிறியதான கூழாங்கல் போடப்பட்டிருக்கும் 6வது அடுக்கில் மணல் பதிக்கப்பட்டிருக்கும்.

இங்கு 100% நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இதன் பின் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் உள்ள நீர்தேக்க தொட்டிகளுக்கு இந்த நீரானது அனுப்பி தேக்கி வைக்கப்பட்டு மக்களின் தேவைக்கேற்ப தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

Exit mobile version