காவிரி ஒழுங்கு முறை குழு கூட்டம் டெல்லியில் 19-ம் தேதி கூடுகிறது

காவிரி ஒழுங்கு முறை குழு கூட்டத்தை வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. தமிழகத்திற்கு நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு நியமித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தலைவர் இல்லாததால் ஜூன் மாதத்திற்கு பின் கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது ஆணையத்திற்கு தலைவரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு துவங்கியுள்ளது.

இருப்பினும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் தொடர்ந்து அக்டோபர் மாதத்திற்கான கூட்டம், திருச்சியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இம்மாதத்திற்கான கூட்டம் வரும் 19-ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Exit mobile version