கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூத்து குலுங்கும், வரவேற்கும் கொன்றை மலர்கள், காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
கோடைக்காலத்தில் பூக்கும் கொன்றை மலர்கள், சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக அதிகளவில் பூக்க தொடங்கியுள்ளன. கேரள மாநிலத்தின் மலர் என்பதோடு, மலையாள மக்களின் புத்தாண்டு தினமான விஷு பண்டிகையின் பூஜைக்குரிய மலராக விளங்கிவரும் இந்த கொன்றை மலர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன. மஞ்சள் நிறத்தில் பூக்கும் இந்த பூக்கள், கண்ணைக் கவரும் விதமாக அமைந்துள்ளது.