ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன கஞ்சா வியாபாரி கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த கச்சு மரைக்காயர் என்கிற முகமது இம்ரான் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். ஆடு வியாபாரி ஒருவரை கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட இவரை நிபந்தனை ஜாமினில் விடுவித்த நீதிமன்றம், ஊட்டி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் கீழக்கரையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்த போது கச்சு மரைக்காயர் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கீழக்கரை கடற்கரைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த கச்சு மரைக்காயரின் உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.